செய்திகள் உலகம்
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை
பேங்காக்:
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா (Thaksin Shinawatra) நன்னடத்தையின் பேரில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ஊழல் குற்றங்களுக்காக 76 வயது தக்சினிற்குச் சென்ற செப்டம்பர் மாதம் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மலேசிய நேரப்படி இன்று காலை 8.40 மணியளவில் அவர் சிறையிலிருந்து வெளியேறினார்.
தக்சினை அவரது குடும்பத்தாரும் பியூ தாய் (Pheu Thai) கட்சி ஆதரவாளர்களும் வரவேற்றனர்.
நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அங்கு திரண்டிருந்தனர். சிலர் "we love Thaksin" என்று கோஷமிட்டனர்.
அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறு கையசைத்த தக்சின் நிருபர்களிடம் பேசாமல் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அவருடைய தண்டனை காலம் செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
