செய்திகள் உலகம்
களை கட்டக் காத்திருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து தொடக்க விழா
லாஸ் ஏஞ்சலெஸ்:
2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் தொடக்க விழா மூன்று நாடுகளில் நடக்கவிருக்கிறது.
மெக்சிக்கோ, அமெரிக்கா, கனடா ஆகிய மூன்றும் கோலாகலமாக உலகக் கிண்ணப் போட்டிகளைத் தொடங்கிவைக்கவுள்ளன.
அமெரிக்காவின் பிரபல நட்சத்திரங்களின் ஆடல், பாடல் கொண்டாட்டங்களில் மூன்று நாடுகளிலும் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க தயாராகி வருகின்றனர்.
நாடுகள் அவற்றின் தனித்துவமிக்க கலாசாரத்தை எடுத்துக்காட்டும் அங்கங்களைப் படைக்கவுள்ளன.
அடுத்த மாதம் ஜூன் 11ஆம் தேதி மெக்சிக்கோவில் தொடக்க விழா நடைபெறுகிறது.
மெக்சிக்கோவும் தென் ஆப்பிரிக்காவும் அங்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் களம் இறங்கும்.
12ஆம் தேதி கனடாவிலும் அமெரிக்காவிலும் தொடக்க விழாக்கள் நடைபெறும்.
உலகளாவிய காற்பந்து விளையாட்டின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் முயற்சிகளும் எடுக்கப்படும்.
இம்முறை காற்பந்துப் போட்டிகள் கிட்டதட்ட ஆறு வாரத்துக்கு நடைபெறும்.
ஆதாரம் : AFP
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
