செய்திகள் உலகம்
சிங்கப்பூர் சுற்றுலாத் துறை 2025 இல் சிறப்பான வருவாயை ஈட்டியது: நடப்பாண்டில் அறைகூவல்களை சந்திக்க நேரிடும்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் சுற்றுலாத்துறைக்குச் சென்ற ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்தது.
சுற்றுலாத்துறையின் வழி 32.8 பில்லியன் வெள்ளி ஈட்டப்பட்டது.
ஆண்டு அடிப்படையில் அது சுமார் 10 விழுக்காடு உயர்வு.
சென்ற ஆண்டு 16.9 மில்லியன் பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை தந்தனர்.
எதிர்பார்த்ததைவிட அந்த எண்ணிக்கை குறைவு என்றபோதும் சுற்றுலாத்துறையின் வருமானம் முன்னுரைக்கப்பட்டதைவிட அதிகமாகவே இருந்தது.
சீனா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளே அதிகம் செலவு செய்தனர்.
ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பயணிகள் செலவிட்ட தொகையும் குறைந்தது 10 விழுக்காடு அதிகரித்திருந்தது.
இவ்வாண்டு சுற்றுலாத்துறையின் மூலம் 31 முதல் 32.5 பில்லியன் வெள்ளி வரை வருமானம் வரும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
அனைத்துலகச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 17 முதல் 18 மில்லியன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் எரிபொருள் நெருக்கடி போன்ற அறைகூவல்களால் பயணிகள் செலவுசெய்யும் தொகை குறையக்கூடுமெனச் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கூறியது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
