செய்திகள் உலகம்
ஹன்தா தொற்று: 2 சிங்கப்பூரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
சிங்கப்பூர்:
எம்.வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் பயணம் செய்த இரண்டு சிங்கப்பூரர்கள், ஹன்தா தொற்று பரிசோதனைக்காக தேசிய தொற்று நோய்கள் மையத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கு சளி பாதிப்பு இருந்தாலும், அவர் பொதுவாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
இதற்கிடையில், மற்றவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை.
சிங்கப்பூரில் பொதுமக்களுக்கு தற்போது ஆபத்து குறைவாக இருப்பதாக தொற்றுநோய் முகமை தெரிவித்துள்ளது.
தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்தால், அவர்கள் கடைசியாக தொற்றுக்கு ஆளான தேதியிலிருந்து 30 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும்.
தொற்றுக்கு ஆளான கடைசி தேதியிலிருந்து மீதமுள்ள 45 நாட்களுக்கு அவர்கள் தொலைபேசி வாயிலாகவும் கண்காணிக்கப்படுவார்கள்.
ஏப்ரல் 1 அன்று அர்ஜெண்டினாவின் உஷுவாயா துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டபோது, அதில் அந்த இரண்டு நபர்களும் இருந்ததாக மே 4, 5 ஆகிய தேதிகளில் சிடிஏ-வுக்கு அறிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
