செய்திகள் மலேசியா
3ஆர் பிரச்சினைகள் முடிவுக்கு வர வேண்டும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல்களுக்கு மட்டும் தங்கள் முகங்களைக் காட்டக் கூடாது: தெங்கு ஹஸ்னால்
குவாந்தான்:
பகாங் மாநிலத்தில் நல்லிணக்கத்தைக் குலைக்கும் எந்தவொரு முயற்சியிலும், குறிப்பாக மதம், இனம், ஆட்சியாளர்கள் (3ஆர்) தொடர்பான பிரச்சினைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
பகாங் பட்டத்து இளவரசர், தெங்கு ஹசனால் இப்ராஹிம் அலம் ஷா இதனை வலியுறுத்தினார்.
இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் வேண்டுமென்றே வெறுப்பைத் தூண்டும் எந்தவொரு செயலும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே, இந்த 3ஆர் பிரச்சினைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
அனைத்துத் தரப்பினரும், பின்னணியைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு செயலிலும் பொறுப்புடன் நடந்துகொண்டு, மரியாதை, சகிப்புத்தன்மை, சட்டம் ஆகிய விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், அரசு நிலத்திலோ அல்லது தனியார் நிலத்திலோ வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான எந்தவொரு விஷயமும், வகுக்கப்பட்டுள்ள சட்டம், விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
எதிர்க்கட்சியானது ஒரு கட்டுப்பாடு மற்றும் சமநிலையாக ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்ற வேண்டும்.
அரசாங்கம் யாரையும் பின்தங்க விடாமல் மக்களின் நலன் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதியும் தமது பொறுப்புகளையும் நம்பிக்கைகளையும் முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் நிறைவேற்ற வேண்டும்.
இது தேர்தலுக்கு முன்னதாக வெறும் பகட்டைக் காட்டுவது மட்டுமல்ல.
மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் விரைவாகவும், திறமையாகவும், திறம்படவும் தீர்க்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
15ஆவது பகாங் மாநில சட்டமன்றத்தின் ஐந்தாம் பதவிக் காலத்தின் முதல் கூட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய தெங்கு ஹஸ்னால் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2026, 5:39 pm
சைபர்ஜெயாவில் அதிரடி குடிநுழைவு சோதனை: 13 வெளிநாட்டவர்கள் சிக்கினர்
May 8, 2026, 5:10 pm
ஆயர் தாவாரில் கொடூரக் கொள்ளை: கடினமான பொருளால் தாக்கப்பட்ட முதிய ஜோடி
May 8, 2026, 4:29 pm
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் கனமழையால் திடீர் வெள்ளம்
May 8, 2026, 3:08 pm
