நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யுத்தம்; மலாக்கா மாநில மாணவர்களிடையே புரட்சியை ஏற்படுத்தும்: சுரேன் கந்தா

அலோர்காஜா:

ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யுத்தம் மலாக்கா மாணவர்களிடையே புரட்சியை ஏற்படுத்தும்.

அந்நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் 44  ஆண்டுகளாக நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக கிட்டத்தட்ட நாட்டில் 57 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பட்டதாரிகளை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையங்கள் தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது.

கல்வி அனைவருக்கான உரிமை. அது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

இதன் மூலம் மாணவர்கள் கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க வேண்டும் என்பது தான் இதற்கான காரணமாகும்.

இதன் தொடர் நடவடிக்கையாக தான் கல்வி யுத்தத்தை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.

தற்போது மலாக்காவிலும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யுத்தம் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது.

மலாக்கா மாநிலத்தில் மூன்று இடங்களில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இதன் வாயிலாக மலாக்கா மாநில மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை நாங்கள் மேற்கொள்ள உள்ளோம்.

இது மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிவகுக்கும் என்று சுரேன் கந்தா கூறினார்.

முன்னதாக மலாக்கா மாநில கல்வி யுத்தத்தை  மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ விபி சண்முகம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset