செய்திகள் மலேசியா
ஆயர் தாவாரில் கொடூரக் கொள்ளை: கடினமான பொருளால் தாக்கப்பட்ட முதிய ஜோடி
ஈப்போ:
நேற்று சித்தியாவானுக்கு அருகிலுள்ள ஆயர் தாவார், ஜாலான் மலாயுவில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை நடந்த போது, கடினமான பொருளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், முதியவர் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் அவரது மனைவி காயமடைந்தார்.
காலை 5.30 மணியளவில், அந்தக் கொள்ளை குறித்து பொதுமக்களிடமிருந்து போலிஸார் அழைப்பைப் பெற்றதாக மஞ்சோங் போலிஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்த் ரஹ்மான் தெரிவித்தார்.
"அந்த முதிய தம்பதியினர் ஒரு ஆடவரால் தாக்கப்பட்டனர். கடினமான பொருளால் அடிபட்டதில், இருவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர்.
"இரண்டு கைப்பேசிகள், பாதிக்கப்பட்டவர்களின் பணப்பைகளை எடுத்துச் சென்ற பின்னர், சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டார். சத்தத்தைக் கேட்டு வந்த அண்டை வீட்டார், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து, சிகிச்சைக்காக அவர்களை ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
84 வயதுடைய பாதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போதே இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக ஹஸ்புல்லா கூறினார். மேலும், மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானிக்க, ஒரு பிரேத பரிசோதனை நடத்தப்படும்.
நேற்று மாலை 7.45 மணியளவில், ஏழு முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்ட, 27 வயதுடைய ஒரு ஆண் சந்தேக நபரைக் கைது செய்ய போலிஸ் உளவு, விசாரணைகள் வழிவகுத்தன என்றார் அவர்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302, 394 கீழ் விசாரணைக்கு உதவும் வகையில், சந்தேக நபர் இன்று முதல் ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"சம்பவம் தொடர்பான எந்தத் தகவலும் உள்ள சாட்சிகள் அல்லது பொதுமக்கள், விசாரணைக்கு உதவும் வகையில், மஞ்சோங் மாவட்ட போலிஸ் தலைமையக நடவடிக்கை அறையை 05-688 6222 என்ற எண்ணிலோ, அல்லது 017-682 8005 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 8, 2026, 5:39 pm
சைபர்ஜெயாவில் அதிரடி குடிநுழைவு சோதனை: 13 வெளிநாட்டவர்கள் சிக்கினர்
May 8, 2026, 4:29 pm
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் கனமழையால் திடீர் வெள்ளம்
May 8, 2026, 3:08 pm
