செய்திகள் மலேசியா
கேஎல்ஐஏ ஊழியர்கள், புத்ராஜெயா, சைபர்ஜெயாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் இஆர்எல் ரயில் சேவை: அந்தோனி லோக்
சிப்பாங்:
கேஎல்ஐஏ ஊழியர்கள், புத்ராஜெயா, சைபர்ஜெயாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் இஆர்எல் ரயில் சேவையை பெறுவார்கள்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.
பயணத்தை மேலும் மலிவானதாக மாற்றுவதற்காக, கேஎல்ஐஏ, புத்ராஜயா, சைபர்ஜயாவில் பணி புரியும் ஊழியர்களுக்கு குறைந்த கட்டணங்களை வழங்கும் புதிய மாதாந்திர ரயில் பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இஆர்எல் வழங்கும் இந்தப் பயண அட்டை மைகேஎல்ஐஏ மாதாந்திர பயண அட்டை, மைபுத்ராஜெயா பயண அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி,
கேஎல்ஐஏவின் இரு முனையங்களில் ஏதேனும் ஒன்றில் பணிபுரியும் மலேசியர்களையும், புத்ராஜயா அல்லது சைபர்ஜயாவில் பணிபுரியும் அல்லது வசிக்கும் அரசு ஊழியர்களையும் பிரத்தியேகமாக இலக்காகக் கொண்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடிக்கு அரசாங்கம் பதிலளிக்கும் விதமாக, இந்த மலிவு விலை பயணச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு விரும்புகிறது.
இது மறைமுகமாக எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும்.
அதே வேளையில்.குறிப்பிட்ட பகுதிகளில் பணிபுரிபவர்கள், வாகனங்கள் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவுகிறது.
அரசாங்கம் எந்தப் பணத்தையும் செலவிடவில்லை. விலை வித்தியாசத்தை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்.
வாடிக்கையாளர்கள் என்ற முறையில், சுமார் 60% என்ற அளவில் மட்டுமே இருக்கும் பயணிகளின் எண்ணிக்கையை மேம்படுத்த, அவர்கள் தத்தமது பங்களிப்பைச் செய்யுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2026, 5:39 pm
சைபர்ஜெயாவில் அதிரடி குடிநுழைவு சோதனை: 13 வெளிநாட்டவர்கள் சிக்கினர்
May 8, 2026, 5:10 pm
ஆயர் தாவாரில் கொடூரக் கொள்ளை: கடினமான பொருளால் தாக்கப்பட்ட முதிய ஜோடி
May 8, 2026, 4:29 pm
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் கனமழையால் திடீர் வெள்ளம்
May 8, 2026, 3:08 pm
