செய்திகள் மலேசியா
ஆசியான் நாடுகளின் சங்கமம்: செபுவில் பிரதமர் அன்வார் இப்ராஹிம்
செபு:
பிலிப்பைன்ஸின் சேபுவில், 11 ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை உள்ளடக்கிய 48வது ஆசியான் உச்சி மாநாட்டின் பல முக்கிய அமர்வுகளில் கலந்துகொண்டு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியை இன்று தொடரவுள்ளார்.
பிரதமர் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில், உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்கு முன், ஆசியான் தலைவர்களின் வருகைக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழாவும் ஒன்றாகும்.
பிராந்திய மூலோபாய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, உறுப்பு நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் ஆசியான் உச்சி மாநாட்டின் முழு அமர்விலும் பிரதமர் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு, தற்போதைய புவிசார் அரசியல் சவால்கள் ஆகியன விவாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, மதியத்தில் நடைபெறும் ஆசியான் தலைவர்களின் கலந்துரையாடல் அமர்விலும் (retreat) பிரதமர் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மலேசியாவின் இராஜதந்திர உறவுகளையும், ஆசியான் உறுப்பு நாடுகளுடனான மூலோபாய ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் வகையில், பிராந்தியத் தலைவர்களுடன் பல இருபக்கக் கூட்டங்களை நடத்த பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
திட்டமிடப்பட்டுள்ள சந்திப்புகளில், தாய்லாந்து, கம்போடியாவுடனான இருபக்கக் கூட்டங்களும் அடங்கும். அதனைத் தொடர்ந்து, மாலை 4.20 மணிக்கு வியட்நாமுடன் மற்றொரு அமர்வு நடைபெறும்.
இந்த உச்சி மாநாட்டின் போது மலேசியாவின் நிலைப்பாடு, ஈடுபாட்டைச் சுருக்கமாகக் கூறும் வகையில், மாலை 4.40 மணிக்கு பிரதமர் ஒரு வெளியேறு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்த திட்டமிட்டுள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 8, 2026, 5:39 pm
சைபர்ஜெயாவில் அதிரடி குடிநுழைவு சோதனை: 13 வெளிநாட்டவர்கள் சிக்கினர்
May 8, 2026, 5:10 pm
ஆயர் தாவாரில் கொடூரக் கொள்ளை: கடினமான பொருளால் தாக்கப்பட்ட முதிய ஜோடி
May 8, 2026, 4:29 pm
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் கனமழையால் திடீர் வெள்ளம்
May 8, 2026, 3:08 pm
