செய்திகள் மலேசியா
கழுத்தில் காயங்களுடன் கழிவறையில் கிடந்த 16 வயது சிறுமி: மர்ம நபருக்குப் போலிஸ் வலைவீச்சு
பெனம்பாங்:
நேற்று மதியம் இங்குள்ள கம்போங் துந்துலுக்கில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறையில், ஒரு வெளிநாட்டு இளம்பெண் கடுமையான காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
16 வயதுடைய பாதிக்கப்பட்டவர், கழுத்தில் கடுமையான காயங்களுடன் சுயநினைவின்றி கண்டுபிடிக்கப்பட்டதாக பெனம்பாங் போலிஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் சாமி நியூட்டன் தெரிவித்துள்ளார்.
"பாதிக்கப்பட்டவர் கோத்தா கினபாலுவில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லப்பட்டார், மேலும் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணைக்கு உதவும் வகையில், 30 வயதுக் கடந்த ஒரு ஆண் சந்தேக நபரை போலிஸார் தேடி வருகிறார்கள்" என்று இன்று தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் உள்ள பொதுமக்கள், பெனம்பாங் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த விசாரணை அதிகாரி, ஏஎஸ்பி ஹைரி அவாங் அகுபை 016-8032849 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு சாமி வலியுறுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
