செய்திகள் மலேசியா
சரவாக்கில் மேலும் ஒரு உயிரைப் பறித்த ரேபிஸ் தொற்று
கூச்சிங்:
பிந்துலுவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வெறிநாய்க்கடி (ரேபிஸ்) காரணமாக இறந்ததைத் தொடர்ந்து, சரவாக் மற்றொரு மரணத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் ரேபிஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
சரவாக் மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், 63 வயதான பாதிக்கப்பட்டவர், வெறிநாய்க்கடி தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மே 3 ஆம் தேதி இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பாதிக்கப்பட்டவர், கடந்த பிப்ரவரி நடுப்பகுதியில் ஒரு நாய்க்குட்டியால் கடிக்கப்பட்டார். இருப்பினும், அவர் எந்த சிகிச்சை பெறவில்லை.
"பாதிக்கப்பட்டவர், காயத்தை ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான காலத்தில் தண்ணீரில் கழுவினார். பின்னர், தடுப்பூசி அல்லது மேலதிக சிகிச்சை எதுவும் பெறாமல், வீட்டிற்குத் திரும்பினார்" என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர், ஏப்ரல் 26 ஆம் தேதி, மூட்டு வலியை அனுபவிக்கத் தொடங்கினார், மேலும் தண்ணீர் குடிக்க மறுத்தார். அதே நாளில் அவர் பிந்துலு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆய்வகச் சோதனைகள், சம்பந்தப்பட்ட முதியவருக்கு வெறிநாய்க்கடி தொற்று இருப்பதை உறுதிப்படுத்தின.
"விலங்கால் கடிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதே நாய் பரவ காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
"கடித்த நாய்க்கும் எந்தத் தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை. மேலும், அந்த விலங்கின் வெறிநாய்க்கடி தொற்று நிலையை உறுதி செய்ய முடியவில்லை" என்று அது கூறியுள்ளது.
ஜூலை 2017 இல் சரவாக்கில் வெறிநாய்க்கடி தொற்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 87 பேர் உயிரிழந்துள்ளதோடு அந்த நோயின் இறப்பு விகிதத்தை 92.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
