செய்திகள் சிந்தனைகள்
வெற்றி பெற்றால் போதுமா? இன்னும் நாம் வேறு பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோமோ? - வெள்ளிச் சிந்தனை
மங்கோலியர்கள் பக்தாத் நகரை துவம்சம் செய்த பிறகு, அந்நகரை சுற்றிப் பார்த்தனர். அப்போது சிலர் ஒரு முஸ்லிமை சூழ்ந்துகொண்டு நிற்பதை மங்கோலியத் தலைவர் ஹுலாகுவின் மகள் பார்த்தாள்.
அவரைக் குறித்து விசாரித்தபோது அவர் ஒரு முஸ்லிம் அறிஞர் என்று கூறப்பட்டது. உடனே அவரை அழைத்துவருமாறு ஆணையிட்டாள்.
அவரிடம் கேட்டாள்: "நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறதே. உண்மையா?”
அறிஞர்: "ஆம்”.
அவள்: "நாடியவர்களுக்கு அந்த இறைவன் வெற்றியைக் கொடுப்பதாக நீங்கள் கூறுகின்றீர்களாமே. உண்மையா?”
அறிஞர்: "ஆம்”
அவள்: "அவ்வாறெனில், அந்த இறைவன் உங்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியை அளித்திருக்கிறான். அப்படித்தானே?”
அறிஞர்: "ஆம்”
அவள்: "அப்படியானால், உங்களை விட அந்த இறைவனுக்கு நாங்கள் பிரியமானவர்கள் என்றுதானே பொருள்?”
அறிஞர்: "இல்லை”.
அவள்: "ஏன் இல்லை?”
அறிஞர்: "உனக்கு ஆடு மேய்க்கும் இடையனைத் தெரியுமா?”
அவள்: "ஆம்”
அறிஞர்: "ஆட்டு மந்தையில் நாய்கள் இருப்பதைப் பார்த்திருக்கின்றாயா?”
அவள்: "ஆம்”
அறிஞர்: "ஆடுகள் வழிதவறிச் சென்றால் மேய்ப்பன் என்ன செய்வான்?”
அவள்: "அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, நாய்களை அவற்றின் பின்னால் அனுப்புவான்”.
அறிஞர்: "அந்த நாய்கள் எவ்வளவு காலம் ஆடுகளைத் துரத்தும்?”
அவள்: "அவை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை”
அறிஞர்: "தத்தாரியர்களான நீங்கள் அல்லாஹ்வின் பூமியில் நாய்களைப் போன்றவர்கள். நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் இருந்து விலகிச் சென்றால், அவன் பக்கம் திரும்பும்வரை நீங்கள் எங்களைத் துரத்திக்கொண்டே இருப்பீர்கள்”. (அல்பிதாயா வந்நிஹாயா)
எவ்வளவு அருமையான உவமை! எவ்வளவு பொருள் பொதிந்த உதாரணம்!
இன்னும் நாம் வேறு பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோமோ என்னவோ.. தத்தாரியர்கள் காலம் முதல் இன்றுவரை நம்மை பிறர் துரத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
