செய்திகள் மலேசியா
மலேசிய இந்திய முஸ்லிம் மொழி, கலாசார சங்கத்தின் ஆண்டுக்கூட்டம்
கோலாலம்பூர்:
மலேசிய இந்திய முஸ்லிம் மொழி, கலாசார சங்கத்தின் ஆண்டுக்கூட்டம் MIMCOIN தலைவர் டத்தோ அப்துல் ஹமீத் தலைமையில் தலைநகர் செய்யது உணவக மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் சங்கத்தின் நிர்வாகிகள் PERBAKIM செயற்குழு உறுப்பினர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அனைவரையும் டத்தோ ஹாஜி காசிம் அலியா வரவேற்று உரையாற்றினார்.
அவர் தனது உரையில் PERBAKIM அமைப்பின் 2வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தங்களின் வருகை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.
மொழி, கலாசாரம், ஒற்றுமை, சமுதாய முன்னேற்றம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் எங்கள் அமைப்பு, இந்திய முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளில் பல்வேறு சமூக, கல்வி, கலாசார, இளைஞர் மேம்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உறுப்பினர்கள் அர்ப்பணிப்பின் விளைவாகும்.
இந்த அமைப்பு வெறும் சங்கமாக இல்லாமல், எதிர்கால தலைமுறைக்கு வழிகாட்டும் ஒரு சமூகப் பொறுப்புடைய இயக்கமாக வளர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இங்கு நடைபெறும் கூட்டம், புதிய சிந்தனைகள், நல்ல ஆலோசனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை உருவாக்கும் ஒரு முக்கிய தருணமாக அமையும் என நம்புகிறேன்.
இந்த நிகழ்வை சிறப்பிக்க வருகை தந்த அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும், உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
அவரைத் தொடர்ந்து டத்தோ எம். இசட், கனி உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து டத்தோ அப்துல் ஹமீத் தலைமையுரை நிகழ்த்தினார்.
அனைவரும் தமிழ் மொழியின் முக்கியத்துவம், அவசியம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
டத்தோ அப்துல் ஹக்கிம், டத்தோ வீரா நைனா, டத்தோஸ்ரீ அக்மல், ஹாஜி பஷீர், ஹாஜி தர்மிசுதீன், டத்தோ சிராஜுதீன் உட்பட முக்கிய பிரமுகர்கள் ஆண்டுகூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஆர் டி எம் இஸ்லாமிய வானொலிப் பிரிவின் அப்துல் கனி நெறிப்படுத்தினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
