நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து விழுந்த மாணவன்: மலாக்காவில் நிகழ்ந்த விபரீதச் சம்பவம்

மலாக்கா: 

பத்து பெரெண்டாம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், ஐந்தாம் ஆண்டு பயிலும் 11 வயது மாணவர் ஒருவர் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து விழுந்து காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று நண்பகல் பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மற்றொரு மாணவர் இச்சிறுவனின் காலணியை கட்டிடத்தின் கூரை மீது வீசியதாகவும், அதனை எடுப்பதற்காகச் சிறுவன் முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவத்தின் போது மழை பெய்து கொண்டிருந்ததால், கட்டிடத்தின் தளம், கூரைப் பகுதி மிகவும் வழுக்கலாக இருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

காயமடைந்த மாணவர் உடனடியாக மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

இருப்பினும், அந்த மாணவரின் தற்போதைய உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி முடிந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள்,பிற மாணவர்கள் மத்தியில் இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மலாக்கா தெங்கா மாவட்டக் காவல்துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பாட்டிட் உறுதிப்படுத்தியுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் முறையான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset