செய்திகள் மலேசியா
மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை கூறினார்.
ஜாலான் அம்பாங்கில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய தம்பதியர் மரணமடைந்தனர்.
அதிகாலையில் வேலைக்கு செல்லும் போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
அதே வேளையில் மலாக்கா அலோர்காஜாவில் நிகழ்ந்த விபத்தில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த இரு விபத்துகளுக்கும் வாகன ஓட்டுநர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தான் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதுபோன்ற நபர்களின் அலட்சியத்தால் பல உயிர்கள் இன்று இல்லை.
அதன் அடிப்படையில் மது, போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 7:16 pm
மலேசியாவின் வரலாறு திரிக்கப்படுவதற்கு கோழைத்தனமான பேராசிரியர்களே காரணம்: கைரி சாடல்
May 7, 2026, 5:30 pm
பன்றி வளர்ப்புப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது: சிலாங்கூர் சுல்தான்
May 7, 2026, 5:29 pm
மலேசியர்களை ஒன்றிணைப்பதில் தோல்வியடைந்து விட்டேன்: துன் மகாதீர்
May 7, 2026, 5:28 pm
ஓபிஆர் வட்டி விகிதம் 2.75%-ஆக நீடிக்கிறது: பேங்க் நெகாரா
May 7, 2026, 4:36 pm
