செய்திகள் மலேசியா
ஓபிஆர் வட்டி விகிதம் 2.75%-ஆக நீடிக்கிறது: பேங்க் நெகாரா
கோலாலம்பூர்:
ஓபிஆர் வட்டி விகிதத்தை 2.75 சதவீதமான நீட்டிக்கப்படும் என பேங்க நெகாரா கூறியது.
இன்று நடைபெற்ற பணவியல் கொள்கைக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தற்போதைய ஓபிஆர் அளவில் தொடர்ச்சியான விலை நிலைத்தன்மை, நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கு ஏற்ப பணவியல் கொள்கை நிலைப்பாடு பொருத்தமானதாகவும் இணக்கமானதாகவும் இருப்பதாக அக்குழு கருதுகிறது.
மிதமான பணவீக்கக் கண்ணோட்டத்திற்கு மத்தியில் மலேசியாவின் நிலையான வளர்ச்சிச் சூழலைப் பராமரிக்கும் நோக்கில், ஒரு பூர்வாங்க நடவடிக்கையாக, பேங்க் நெகாரா ஜூலை 2025-ல் ஓபிஆர் வட்டி விகிதத்தை 3%-லிருந்து 2.75%-ஆகக் குறைத்தது.
தொடர்ச்சியான உள்நாட்டுத் தேவை. வலுவான ஏற்றுமதி வளர்ச்சியால் உந்தப்பட்டு, முதல் காலாண்டில் மலேசியாவின் வளர்ச்சி வேகம் தொடர்வதை சமீபத்திய குறிகாட்டிகள் காட்டுவதாக பேங்க் நெகாரா விளக்கியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 7:16 pm
மலேசியாவின் வரலாறு திரிக்கப்படுவதற்கு கோழைத்தனமான பேராசிரியர்களே காரணம்: கைரி சாடல்
May 7, 2026, 5:30 pm
பன்றி வளர்ப்புப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது: சிலாங்கூர் சுல்தான்
May 7, 2026, 5:29 pm
மலேசியர்களை ஒன்றிணைப்பதில் தோல்வியடைந்து விட்டேன்: துன் மகாதீர்
May 7, 2026, 4:36 pm
