செய்திகள் மலேசியா
டாக்டர் பவித்ரா மோகன் மரணத்திற்கு ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்தது காரணமா?; குற்றச்சாட்டை மறுத்தார் டத்தோ சிவநேசன்
ஈப்போ:
பங்கோரில் நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவர் பவித்ரா மோகன்( வயது 30) மரணத்திற்கு ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்தது என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.
இது தொடர்பாக வைரலாகும் காணொளி தொடர்பாக விளக்கமளித்த டத்தோ சிவநேசன் அந்தக் கூற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார்.
உண்மைக்கு புறம்பான அந்த காணொளியை வைரலாக்கிய ஆடவருக்கு எதிராக சுகாதார பிரிவு இலாகா அதிகாரி நேற்று போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஜெலப்பாங்கில் உள்ள கிளினிக்கில் டாக்டராக பணிபுரிந்து வரும் பவித்ரா விடுமுறையை கழிக்க பங்கோருக்கு சென்றுள்ளார்.
அங்கு மோட்டார சைக்கில் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அதன் பின் காலை 10. 55 மணியளவில் விபத்தில் சிக்கியுள்ளார்.
காலை 10. 57 மணியளவில் பொது மக்களிடம் இருந்து போலிசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவசர பிரிவுக்கு காலை 10.57 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது.
காலை 11.01 மணிக்கு பங்கோர் கிளினிக்கு தகவல் அனுப்பப்பட்டு 11.10 மணிக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டு காலை 11.12 மணிக்கு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்தது.
அதன் பின் அம்மருத்துவர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இருந்த போதும் அவர் இறந்துவிட்டார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் சம்பவம் நிகழந்த இடத்தில் இருந்த ஆடவர் அந்த விபத்தை காணொளியில் பதிவு செய்து உண்மைக்கு பரம்பான தகவல்களை பதிவு செய்துள்ளார்.
மேலும், சம்பவ இடத்திற்குச் சென்ற மருத்துவக் குழுவினரை அங்கு இருந்த ஒருவர் மிரட்டியதுடன், பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பங்கோர் கிளினிக்கைச் சேர்ந்த ஒரு பணியாளர் போலிஸ் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை போலிசார் விசாரித்து வருகின்றனர்.
சமூகத்தில் தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக எவ்வித சமரசமும் இருக்காது என்று சிவநேசன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 7:16 pm
மலேசியாவின் வரலாறு திரிக்கப்படுவதற்கு கோழைத்தனமான பேராசிரியர்களே காரணம்: கைரி சாடல்
May 7, 2026, 5:30 pm
பன்றி வளர்ப்புப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது: சிலாங்கூர் சுல்தான்
May 7, 2026, 5:29 pm
மலேசியர்களை ஒன்றிணைப்பதில் தோல்வியடைந்து விட்டேன்: துன் மகாதீர்
May 7, 2026, 5:28 pm
ஓபிஆர் வட்டி விகிதம் 2.75%-ஆக நீடிக்கிறது: பேங்க் நெகாரா
May 7, 2026, 4:36 pm
