நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பன்றி வளர்ப்புப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது:  சிலாங்கூர் சுல்தான்

ஷாஆலம்:

சிலாங்கூரின் எந்தவொரு மாவட்டத்திலும் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தாம் அங்கீகரிக்கவில்லை என சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இதனை வலியுறுத்தினார்.

கடந்த பிப்ரவரி 10 அன்று ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட நிலைப்பாட்டிலேயே இந்த நிலைப்பாடு தொடர்கிறது என்று அவரது தனிச் செயலாளர் முகமது முனீர் பானி கூறினார்.

இது தொடர்பாக, பொதுமக்களிடையே அமைதியின்மையைத் தவிர்ப்பதற்கும், மக்களிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதற்கும்,

இந்தப் பிரச்சினை நிறுத்தப்பட்டு முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியதாக முனீர் கூறினார்.

பன்றிக் கழிவுகள்,  கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் மண், காற்று மற்றும் ஆற்று நீர் மாசுபடுவதற்கான அபாயத்தைக் கருத்தில் கொண்ட பின்னரே சுல்தான்  இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டது.

சிலாங்கூர், கோலாலம்பூ,  புத்ராஜெயாவில் வசிக்கும் சுமார் ஒன்பது மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் ஆதாரமாக விளங்கும்.

நீர் நிலைகளையும் ஆறுகளையும் இந்த நடவடிக்கை பாதிக்கக்கூடும் என்றும் சுல்தான் கவலை தெரிவித்தார், என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset