நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாவாவ்வில் 16 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை போலிஸ் பறிமுதல் செய்தது: ஹுசைன் ஒமார் கான்

தாவாவ்:

தாவாவ்வில் 16 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஶ்ரீ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.

கடந்த ஏப்ரல் 21, மே 1 ஆகிய தேதிகளில் இங்கு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில்  சுமார் 16.34 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன்,  ஃபென்டானைல் ஆகியவற்றை போலிஸ் பறிமுதல் செய்தது.

ஜாலான் அப்பஸ், பத்து 15இல் நடத்தப்பட்ட முதல் சோதனையில், சுமார் 130.60 கிலோ எடை கொண்ட மெத்தம்பெட்டமைன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 128 பிளாஸ்டிக் பொட்டலங்களையும், ஒரு டொயோட்டா ஹேரியர் காரையும்  போலிஸ் பறிமுதல் செய்தது.

மேலும் 36,  52 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்களை போலிசார்  கைது செய்தனர்.

இந்த  முதல் சந்தேக நபர் போதைபொருள் கடத்துபவராக செயல்பட்டு வந்ததும், இரண்டாவது சந்தேக நபர் ஒரு கும்பலின் உறுப்பினர் என்பதும் சோதனையில் தெரியவந்தது.

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மற்றொரு இடத்தில் ஒரு நிசான் சில்ஃபி,  ஒரு டொயோட்டா கேம்ரி ஆகிய கார்களை போலிஸ் சோதனையிட்டது.

இதில் நிசான் சில்ஃபியில் 90.41 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன், 0.98 லிட்டர் எடையுள்ள ஃபென்டானைல் என சந்தேகிக்கப்படும் ஒரு திரவம் கண்டெடுக்கப்பட்டது.

அதே நேரத்தில், டொயோட்டா கேம்ரியை சோதனையிட்டதில், 102.90 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் 99 பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset