நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கழுத்தில் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த இளம் பெண்,  வீட்டின் கழிப்பறையில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார்

பெனம்பாங்:

கம்போங் துந்துலுக்  பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளம் வெளிநாட்டுப் பெண்ணின் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டதாக நம்பப்படும் சம்பவத்தில் அவர் படுகாயமடைந்தார்.

16 வயதான அந்தப் பாதிக்கப்பட்ட பெண், வாடகை வீட்டின் கழிப்பறையில் சுயநினைவின்றி, ரத்தக் கறை படிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கோத்தா  கினபாலுவில் உள்ள எலிசபெத் மகாராணி மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் இருந்தபோது, ​​மதியம் சுமார் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

 அப்போது அந்தப் பெண்ணுக்கு அறிமுகமானவர் என்று நம்பப்படும் ஒரு சந்தேக நபர் அவரை அணுகியதாகவும் அறியப்படுகிறது.

தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த வாடகை வீட்டின் உரிமையாளர், வாடகைதாரர்களில் ஒருவர் தன்னைத் தொடர்புகொண்டு,

தனது வீட்டிற்கு அடுத்துள்ள குடியிருப்புக்கு உடனடியாக வருமாறு போலிஸை கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset