நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் வரலாறு திரிக்கப்படுவதற்கு கோழைத்தனமான பேராசிரியர்களே காரணம்: கைரி சாடல்

கோலாலம்பூர்:

மலேசிய வரலாற்றில் பல்வேறு அம்சங்கள் குறித்து பொதுமக்களிடையே அதிகரித்து வரும் குழப்பத்திற்கு கோழைத்தனமான பேராசிரியர்களே காரணம்.

முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.

கெலுவார் செகேஜாப் ஒலிபரப்பின் ஒரு பகுதியில், நாட்டின் கடந்த காலத்தைப் பற்றிய தவறான தகவல்கள் தொடர்ந்து பரவி வரும் நிலையில், பேராசிரியர்களும் தேசிய வரலாற்று நிபுணர்களும் மௌனம் காப்பதாக கைரி விமர்சித்தார்.

மலேசியாவின் இந்த முக்கிய வரலாற்று ஆசிரியர்களே, மலேசியாவின் வரலாற்றைப் பாதுகாக்க முன்வர நீங்கள் அஞ்சினால், வரி செலுத்துவோரின் பணத்தில் உயர் கல்விக் கூடங்களில் விரிவுரையாளராக இருப்பதில் என்ன பயன்?.

தற்போது நமது நாட்டின் வரலாறு குறித்து குழப்பத்தில் இருக்கும் பொதுமக்களை எதிர்கொள்ளத் துணியவில்லை என்றால், நீங்கள் ஒரு கோபுரத்தில் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அவர் கூறினார்.

பேராசிரியர் சோலேஹா மலேசியாவின் முதன்மை வரலாற்றாசிரியராக இருக்கிறார்.

ஏனெனில், அவருடைய கருத்துக்கள் அபத்தமானவையாக இருந்தாலும், அவரால் பொதுமக்களை எதிர்கொள்ள முடிந்துள்ளது.

நீங்கள் அனைவரும் கோழைகள் என்பதால், அவரால் தனது அபத்தமான வரலாற்றை விற்க முடிந்துள்ளது என்று கைரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset