செய்திகள் உலகம்
தாய்லாந்தின் நற்பெயருக்குக் களங்கம்: அநாகரிகச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை
பேங்காக்:
தாய்லாந்திற்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வதைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பொது இடங்களில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது போன்ற செயல்கள் தாய்லாந்தின் கலாச்சாரத்தையும் நற்பெயரையும் பாதிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது.
தாய்லாந்து பொதுவாக ஒரு பழமைவாத சமூகம் என்பதால், பொது இடங்களில் எல்லை மீறிய இத்தகையச் செயல்கள் எவ்விதத்திலும் சகித்துக்கொள்ளப்படாது என அரசு எச்சரித்துள்ளது.
அண்மையில், கடற்கரை, வாகனங்களில் அநாகரிகமாக நடந்துகொண்ட பிரான்ஸ் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் நாட்டை விட்டும் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பதற்கோ அல்லது பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்கோ சுமார் 5,000 பாட் (Baht) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சுற்றுலாத்துறை நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தாலும், நாட்டின் விழுமியங்களைச் சீர்குலைக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது என அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
நடப்பு ஆண்டில் சுமார் 3.3 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொழுதுபோக்கு மையங்களில் சோதனைகளை அதிகரிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தின் அழகிய கலாச்சாரத்தையும் சட்டங்களையும் மதித்து நடக்க வேண்டும் என அந்நாட்டு அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
