நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆற்று அரிப்பு ஏற்படும் அபாயம்: மயானத்திற்கு அருகே மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு

குவா மூசாங்: 

பெர்டாம் லாமா கிராமத்தில் உள்ள நெங்கிரி ஆற்றின் கரையில் மணல் அள்ளும் நிலையம் செயல்பட்டு வருவது, அப்பகுதியிலுள்ள சுமார் 1,000 குடியிருப்பாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இந்தச் செயல்பாட்டினால் ஆற்று அரிப்பு ஏற்பட்டு, ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராம மயானம் பாதிக்கப்படலாம் என மக்கள் அச்சப்படுகின்றனர்.

இத்திட்டம் குறித்து கிராம மக்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள கிராம மேம்பாட்டுக் குழுவின் செயலாளர் முஹம்மத் அஸ்ரி ஹசன், மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் கிராமச் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

5 டன் எடை வரை மட்டுமே தாங்கக்கூடிய இச்சாலைகளில், சுமார் 20 டன் எடையுள்ள லாரிகள் செல்வதால் விபத்துகள் அதிகரித்து, மக்கள் காயமடைந்து வருவதாகவும் குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்பிரச்சினை குறித்து நேரில் ஆய்வு செய்த நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் முஹம்மத் அஸ்மாவி ஃபிக்ரி, மணல் எடுக்கும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இருப்பினும், எதிர்காலத்தில் மற்ற நிறுவனங்கள் இதே போன்று குடியிருப்புகள், மயானங்களுக்கு அருகில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

மணல் அள்ளுவதற்கான அனுமதியை வழங்கும் முன், சுற்றுப்புறச் சூழல், பொதுமக்களின் பாதிப்புகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இத்தகைய திட்டங்களில் மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset