செய்திகள் மலேசியா
தொலைபேசி வழி மோசடி: 8.8 இலட்சம் ரிங்கிட்டை இழந்த வியாபாரி
கோலா திரெங்கானு:
காப்பீட்டு நிறுவன ஊழியர், காவல்துறை அதிகாரி என அடையாளப்படுத்திக்கொண்ட மர்ம நபர்களிடம் சிக்கி, 50 வயது மதிக்கத்தக்க வியாபாரி ஒருவர் தனது சேமிப்புப் பணமான 882,920 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
கடந்த மார்ச் 23-ஆம் தேதி காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறித் தொடர்பு கொண்ட நபர், பாதிக்கப்பட்டவரின் பெயரில் போலி மருத்துவக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த அழைப்பு ‘காவல்துறை அதிகாரி’ என நம்பப்பட்ட ஒருவரிடம் இணைக்கப்பட்டுள்ளது. அவர், பாதிக்கப்பட்டவரின் பெயர் பணமோசடி, ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளதாகக் கூறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.
வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமானால், அவரது அனைத்துச் சேமிப்புகளையும் புதிய வங்கிச் கணக்கிற்கு மாற்ற வேண்டும் எனவும், விசாரணை முடியும் வரை கணக்கைச் சரிபார்க்கக் கூடாது எனவும் கட்டளையிட்டுள்ளார்.
இதனை நம்பிய அந்த வியாபாரி, தனது பல்வேறு சேமிப்புக் கணக்குகளிலிருந்து சுமார் RM883,000 ரிங்கிட்டை குறிப்பிட்ட இரு கணக்குகளுக்கு மாற்றியதோடு, தனது இணைய வங்கி விவரங்களையும் அவர்களிடம் வழங்கியுள்ளார்.
கடந்த மார்ச் 29 முதல் மே 4 வரை, அந்த வியாபாரியின் அனுமதி இன்றியே அவரது கணக்கிலிருந்து சிறு சிறு தவணைகளாகப் பணம் மாற்றப்பட்டுள்ளது.
மீண்டும் பணம் கோரப்பட்டதால் சந்தேகமடைந்த வியாபாரி தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது, மொத்தப் பணமும் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்லி முஹம்மத் நோர் கூறுகையில், இச்சம்பவம் குறித்து மோசடிப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இத்தகைய மர்ம அழைப்புகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 10:25 am
ஆற்று அரிப்பு ஏற்படும் அபாயம்: மயானத்திற்கு அருகே மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு
May 6, 2026, 10:54 pm
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 8 வாகனங்கள் சிக்கின
May 6, 2026, 10:53 pm
