செய்திகள் மலேசியா
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம் கட்டாயம்: பன்றி பண்ணை விவகாரத்தில் டத்தோ ஃபஹ்மி ஃபட்சிலின் அதிரடி விளக்கம்
கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு, சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கும் வகையில், பன்றி வளர்ப்புத் தொழிலுக்கு மத்திய அரசு கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
மக்கள் வசிக்கும் பகுதிகள், நீர் ஆதாரங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள புதிய இடங்களில் மட்டுமே இனி இத்தகைய பண்ணைகளை அமைக்க முடியும் என்று தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த முடிவை அறிவித்தார். சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் ஆலோசனையைப் பெற்றும், மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் கலந்தாலோசித்த பிறகும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கழிவு மேலாண்மையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், சிலாங்கூர் சுல்தான் மாநிலத்தில் எந்தப் பகுதியிலும் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் மக்கள் எதிர்க்கும் இடங்களில் பண்ணைகளை அமைக்கப் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
தகுந்த இடங்கள் இல்லாதபட்சத்தில், குறிப்பாகச் சிலாங்கூரில் இந்தத் தொழிலை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் விளைவாக, சிலாங்கூர் மாநில அரசு இனி புதிய பன்றி வளர்ப்பு உரிமங்களை வழங்கப்போவதில்லை என்றும், தற்போது செயல்பாட்டில் உள்ள பண்ணைகளை முறையே படிப்படியாக மூடப்போவதாகவும் முடிவு செய்துள்ளது.
பொதுமக்களின் நலம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
