செய்திகள் மலேசியா
நில அமிழ்வு சம்பவத்தில் மரணமடைந்த விஜயலட்சுமியின் குடும்பத்தாருக்கு நியாயமான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்: வழக்கறிஞர் பார்த்திபன்
கிள்ளான்:
ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு சம்பவத்தில் மரணமடைந்த விஜயலட்சுமியின் குடும்பத்தாருக்கு அரசு நியாயமான இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும்.
விஜயலட்சுமியின் குடும்பத்தாரின் வழக்கறிஞர் பார்த்திபன் இதனை கூறினார்.
கடந்த 2024 ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் குப்பத்தைச் சேர்ந்த 48 வயதான விஜயலட்சுமி எட்டு மீட்டர் ஆழமான குழியில் விழுந்து காணாமல் போனார்.
தேடுதல், மீட்பு நடவடிக்கை ஒன்பது நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.
பாதிக்கப்பட்டவரின் நிலை தற்போது காணாமல் போன நபர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவரது இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று விஜலட்சுமியின் மரணத்திற்கான இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்வேளையில் தேசிய பதிவிலாகாவிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே வேளையில் விஜயலட்சுமியின் மரணத்திற்கு நியாயமான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்.
காரணம் விஜயலட்சுமியின் மரணத்திற்கு கட்டுமான தவறுகள், அலட்சியம், கவனக் குறைவுகள் முக்கிய காரணமாக உள்ளது. அதன் அடிப்படையில் இழப்பீடும் அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
உதாரணமாக மரம் விழுந்து மரணமடைந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 8 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வழக்குடன் ஒப்பிட்டுக்கு விஜயலட்சுமியின் குடும்பத்தாருக்கு அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.
இதன் அடிப்படையில் கூட்டரசுப் பிரதேச அமைச்சு, கோலாலம்பூர் மேயர் ஆகியோரை நாங்கள் சந்தித்து பேசவுள்ளோம்.
இப்பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும் என நாங்கள் நினைக்கிறோம் என்று வழக்கறிஞர் பார்த்திபன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 1:00 pm
ஜொகூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படாது: ஓன் ஹபிஸ்
May 7, 2026, 12:59 pm
முதியவர் ஜெயகோபியை கொலை செய்த வழக்கில் நான்கு நண்பர்கள் மீது குற்றச்சாட்டு
May 7, 2026, 12:19 pm
