செய்திகள் மலேசியா
ரோன் 97இன் விலையில் மாற்றமில்லை: மானியமில்லா ரோன் 95 பெட்ரோல், டீசலின் விலை ஐந்து சென்கள் உயர்வு
புத்ராஜெயா:
ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 4.90 ரிங்கிட் என்ற விலையில் நீடிக்கிறது.
அதே வேளையில், தீபகற்ப மலேசியாவில் மானியமில்லாத ரோன் 95 பெட்ரோல், டீசல் விலைகள் தலா 5 சென் உயர்கிறது.
இது மே 7 முதல் 13 வரையில் அமலில் இருக்கும்.
அதே காலகட்டத்தில் அரசாங்கம் மக்களுக்கும் குறிப்பிட்ட சில துறைகளுக்கும் இலக்கு வைக்கப்பட்ட மானிய விலைகளைத் தொடர்ந்து பராமரித்தது.
இதில் ரோன் 95 (பூடி95) ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட், சபா, சரவா, லாபுவானில் டீசல் ஒரு லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என நிலை நிறுத்தப்படும்.
நிதியமைச்சு முந்தைய வாரத்தின் சராசரி விலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் தானியங்கி விலை நிர்ணய முறை அடிப்படையில் இந்த விலையை அறிவித்தது.
மேலும் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலுக்குத் தீர்வு காணப்படாததைத் தொடர்ந்து,
பெட்ரோலிய விலைகள் ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, தொடர்ந்து உயர்வாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
