நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூச்சோங் பிரிமாவில் பரபரப்பு: அடகுக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களுக்கு போலிஸ் வலைவீச்சு

சுபாங் ஜெயா: 

பூச்சோங் பிரிமா பகுதியில் உள்ள அடகுக்கடை ஒன்றில் முகமூடி அணிந்து, அரிவாளுடன் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மூன்று மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் குறித்து சுபாங் ஜெயா மாவட்டக் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று கடைக்குள் நுழைந்த அந்த மூவர் கும்பல், வாடிக்கையாளர் சேவைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்றது. 

இருப்பினும், அவர்களின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், சுதாரித்துக்கொண்ட கடையின் மேலாளர் உடனடியாகப் பாதுகாப்பு எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடினர்.

இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மாவட்டக் காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமத், இக்கொள்ளை முயற்சி தொடர்பாகத் தகவல் தெரிந்த பொதுமக்கள் 03-78627222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு போலிசாருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். 

தகவல் வழங்குபவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தற்போது இச்சம்பவம் குறித்து 'தண்டனைச் சட்டத்தின் பிரிவு 393'-ன் கீழ் கொள்ளை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset