செய்திகள் மலேசியா
2026 உலகக்கோப்பை கால்பந்து: மலேசியாவில் ஆர்.டி.எம், Unifi TV அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்கள்
கோலாலம்பூர்:
மலேசியாவில் 2026 உலகக் கோப்பைப் போட்டியை, மக்கள் உள்ளடக்கிய, சட்டப்பூர்வ, விரிவான முறையில் அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான அரசாங்க முயற்சியில், மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனமான ஆர்.டி.எம்-உம், Unifi TV ஆகியவை அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளன.
உயர் தர ஒளிபரப்பையும், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குப் பரந்த அணுகலையும் உறுதி செய்வதற்காக, தனியார் துறையுடனான ஒத்துழைப்பின் மூலமே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றுதகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.
MyTV மூலமான இலவச ஒளிபரப்பு, RTM க்ளிக், Unifi TV மூலமான OTT தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மூலம் அந்தப் போட்டி ஒளிபரப்பப்படும் என்றார் அவர்.
"Unifi TV-ல் மொத்தம் 104 போட்டிகளின் விரிவான ஒளிபரப்பு நேரலையில் ஒளிபரப்பப்படும். அதே சமயம், ஆர்.டி.எம், நேரலையில் அல்லது பதிவு செய்யப்பட்ட ஒளிபரப்பின் மூலம், பெரும்பாலான போட்டிகளை ஒளிபரப்பும்.
"இது, ரசிகர்களுக்குப் பல்வேறு காணொளித் தேர்வுகளை வழங்குகிறது" என்று இன்று அங்காசாபுரியில் நடைபெற்ற வாராந்திர ஊடகச் சந்திப்பில் அவர் கூறினார்.
தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங், தகவல் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ஹலிம் ஹம்ஸா, பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரி நூர்-உல் அஃபிடா கமாலுதீன், பெர்னாமா செய்திச் சேவையின் துணைத் தலைமை ஆசிரியர் முஹம்மத் ஷுக்ரி இஷாக், ஆர்.டி.எம் தலைமை இயக்குநர் அஷ்வாட் இஸ்மாயில் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
