செய்திகள் உலகம்
பெய்ரூட் வான்வழித் தாக்குதல்: ஹிஸ்புல்லா மூத்த தளபதி கொல்லப்பட்டார்
லெபனான்:
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் உயரடுக்குப் படையான 'ரத்வான்' (Radwan) பிரிவின் மூத்தத் தளபதி மாலெக் பலூத் கொல்லப்பட்டார்.
கடந்த ஒரு மாத காலத்தில் பெய்ரூட் பகுதியில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதல் குறித்துத் தகவல் வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லாவின் முக்கியத் தளபதிகளைக் குறிவைத்தே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
லெபனானின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய இந்தத் தொடர் தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் கோபெய்ரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ரத்வான் படைத் தளபதிகள் ரகசிய ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் அந்தப் கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், இந்தப் புதிய தாக்குதல் காரணமாக அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஆசிய நாடுகளிடையே நிலவி வரும் மோதல் போக்கின் காரணமாக, பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியிலிருந்து பெரும்பாலான மக்கள் ஏற்கனவே வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
