நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெங்காழும் தீவு அருகே படகு விபத்து: கடலில் விழுந்த வாலிபரைத் தேடும் பணி தீவிரம்

கோத்தா கினபாலு: 

இங்குள்ள மெங்காலும் தீவுக்கு அருகில் ஏற்பட்ட படகு மோதல் விபத்தில், கடலில் விழுந்து ஆடவர் ஒருவர் காணாமல் போனதாகத் தெரிகிறது.

நூர் அமின், வயது 21 என்று அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர், மே 4 ஆம் தேதி, காலை 9.30 மணியளவில், அவர் பயணம் செய்த படகு, மற்றொரு கப்பலுடன் மோதியதைத் தொடர்ந்து, காணாமல் போனதாகத் தெரிகிறது.

"விபத்திற்குப் பின்னர், பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள், அவரது சக ஊழியர்களுக்குத் தெரிவித்தனர். அவர்கள் அவரைத் தேட முயன்றனர், ஆனால் முடியவில்லை" என்று கோத்தா கினபாலு தீயணைப்பு நிலையத் தலைவர் ஆர்டினே கிலு கூறினார்.

 புதன்கிழமை, மே 6 காலையில் தமது தரப்பு அவசர அழைப்பைப் பெற்றதாகவும், உடனடியாக தேடுதல், மீட்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

போலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையானது, நூர் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட பகுதியில் இருந்து, 10 கிமீ சுற்றளவை உள்ளடக்கியதாக ஆர்டினே கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset