செய்திகள் மலேசியா
அப்பா என்ற பாதுகாப்பு, கொடூரமாக உடைந்தது: சொந்த மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை
தாவாவ்:
குடும்பத்தின் பாதுகாப்புக் கோட்டையாக இருக்க வேண்டிய ‘தந்தை’ என்ற அடையாளமே கொடூர குற்றத்தின் முகமாக மாறிய அதிர்ச்சி சம்பவத்தில், தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஏழு குற்றச்சாட்டுகளை 53 வயதுடைய ஒருவர் இன்று இங்குள்ள செஷன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
லஹாட் டத்துவில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய அந்த நபர், நீதிபதி அஹ்மத் ஃபைஸாத் யஹயா முன்னிலையில் குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த டிசம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் 18, 19 ஆம் தேதிகள் வரை, தாவாவிலுள்ள பல ஹோட்டல்களில் தனது 25 வயது மூத்த மகளை பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(3) கீழ் இந்தக் குற்றம் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் குறைந்தது 10 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கில் துணை வழக்குத் தொடரும் அதிகாரி முஹம்மத் ஹைக்கல் ஹஸ்வான் எம்.டி யாத்தின் வழக்கை முன்னெடுத்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர் வழக்கறிஞர் இன்றி ஆஜரானார். பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை கிடைக்கும் வரை, வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இச்சம்பவம் இதன் மூலம் முடிவடைவதில்லை. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி, இதே நபர் 22, 25 வயதான தனது இரண்டு மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்த 11 குற்றச்சாட்டுகளிலும் குற்றம் ஒப்புக்கொண்டதற்காக, லஹாட் டத்து நீதிமன்றம் அவருக்கு மொத்தம் 165 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 10 பிரம்படிகள் வழங்கப்பட்டன.
இந்தக் கொடூர உண்மை மேலும் இதயத்தை உருக்கும் வகையில், இரு மகள்களும் தங்களின் இளமைக் காலமான 15, 18 வயதிலிருந்தே இந்த அநியாயத்தின் பலியாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மறுத்தால் தாக்கப்படுவோம் என்ற அச்சுறுத்தலின் கீழ், அவர்கள் நீண்டகாலம் மௌன வேதனையில் தள்ளப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு, குடும்பத்திற்குள் மறைந்து இருக்கும் பாலியல் வன்முறையின் கருங்கதையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, “பாதுகாப்பு” என்ற பெயரில் நடக்கும் கொடுமைகள் குறித்து சமூகம் கண்விழிக்க வேண்டிய அவசியத்தை மிகுந்த வேதனையுடன் நினைவூட்டுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
கிளந்தானில் கொலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு: போலிஸ்
May 18, 2026, 5:30 pm
