செய்திகள் மலேசியா
இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேசனில் 2,000 இடங்கள்; நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் உறுதி: டத்தோ நெல்சன்
புத்ராஜெயா:
இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேசனில் 2,000 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்கிடம் மஇகா கோரிக்கையை முன்வைத்தது.
இக்கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் உறுதியளித்தார் என்று மஇகா கல்விக் குழு தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கூறினார்.
மஇகா கல்விக் குழு இன்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்குடன் சிறப்பு சந்திப்பை நடத்தியது.
கல்வியமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மஇகாவின் சிவசுப்பிரமணியம், டத்தோ கமலநாதன், டத்தோஸ்ரீ தேவமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் இந்திய மாணவர்கள், தமிழாசிரியர்கள் பிரச்சினைகள் குறித்து கல்வியமைச்சருடன் விவாதிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் இந்திய மாணவர்களுக்கு என மெட்ரிகுலேசனில் 2,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் இந்த 2,000 இடங்களை கல்வியமைச்சு மீண்டும் ஒதுக்க வேண்டும்.
குறிப்பாக தகுதியான மாணவர்களுக்கு அவ்வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழி வகுப்புகளுக்கு இன்னும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தையும் கல்வியமைச்சு கவனிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இக்கோரிக்கைககை செவிமடுத்த கல்வியமைச்சர் இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார் என்று டத்தோ நெல்சன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மலாய், ஆங்கில மொழிகளில் சிறந்து விளங்குகின்றனர்.
இதனை பெருமிதத்துடன் கூறிய கல்வியமைச்சர் இதற்கு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என கூறியதாக மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
