செய்திகள் மலேசியா
படினி நிறுவனச் சொத்துக்கள் முடக்கம்: பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை தொடக்கம்
புத்ராஜெயா:
பிரபல ஆடை விற்பனை நிறுவனமான படினி ஹோல்டிங்ஸ் (Padini Holdings Bhd), அதன் துணை நிறுவனங்களுக்குச் சொந்தமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளது.
இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி, இந்த விவகாரத்தில் இதுவரை 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விசாரணை நிலுவையில் உள்ளதால், சம்பந்தப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்தபோதிலும் நிறுவனத்தின் சொத்துக்களைத் தொடர்ந்து முடக்கி வைக்கப் புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
பணமோசடி, பயங்கரவாத நிதி தடுப்புச் சட்டத்தின் (AMLA) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, படினி நிறுவனம், அதன் 5 துணை நிறுவனங்களுக்குச் சொந்தமான 21 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.
குறிப்பாக, படினி கார்ப்பரேஷன் (Padini Corporation) நிறுவனத்தின் 7 கணக்குகளும், யீ ஃபோங் ஹங், படினி டாட் காம் ஆகிய நிறுவனங்களின் தலா 4 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், முடக்கப்பட்ட இந்தக் கணக்குகள் நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுபவை அல்ல என்பதால், வணிகம் பாதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகப் பாடினி நிறுவனம் பங்குச் சந்தை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
கிளந்தானில் கொலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு: போலிஸ்
May 18, 2026, 5:30 pm
