செய்திகள் மலேசியா
வணிகர்களுக்குப் பேருதவி; மாரா கடனைச் சீரமைக்கப் புதிய சலுகை
ஷா ஆலம்:
நாடு முழுவதும் உள்ள மாரா (MARA) நிறுவனத்தின் வணிக வளாகங்களுக்கு 20 விழுக்காடு வாடகைத் தள்ளுபடி வழங்கப்படும் என அதன் தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுக்கி அறிவித்துள்ளார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டு, சிறு வணிகர்கள், வியாபாரிகளின் நலனுக்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த வாடகைத் தள்ளுபடி இந்த மாதம் முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
வாடகைத் தள்ளுபடி மட்டுமின்றி, மாராவிடம் கடன் பெற்றுப் பொருளாதாரச் சிக்கலில் தவிப்பவர்கள் தங்களின் கடன் திருப்பிச் செலுத்தும் முறையைச் சீரமைத்துக் கொள்ளவும் (Restructuring) வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பணப்புழக்க நெருக்கடியில் இருக்கும் கடனாளிகள் இது குறித்து மாரா அதிகாரிகளுடன் ஆலோசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வணிகர்கள், கடனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட அல்லது மாநில மாரா அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வைப் பெறலாம்.
இந்தச் சலுகை சிறு வியாபாரிகளின் நிதிச் சுமையை ஓரளவுக்குக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மற்ற உள்ளூர் அதிகாரிகளும் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
