செய்திகள் இந்தியா
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவி
இஸ்லாமாபாத்:
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவியுள்ளது.
ஒமனில் இருந்து எம்வி கவுதம் என்ற கப்பல் இந்தியாவை நோக்கி சென்றுகொண்டு இருந்தது.
இந்நிலையில் கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அதன் பணியாளர்கள் மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு, ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலில் 6 இந்தியர்கள், ஒரு இந்தோனேஷிய நாட்டை சேர்ந்தவர் உட்பட 7 பேர் இருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பு மைய அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர்.
இதனையடுத்து பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கடலில் சிக்கி தவித்த கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு உணவு, மருத்துவ உதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்கியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
