நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த ஆண்டின் பிற்பகுதியில் பேங்க் நெகாரா ஓபிஆரை உயர்த்தக்கூடும்: ஜுவாய் ஐகியூஐ

கோலாலம்பூர்:

பேங்க் நெகாரா மலேசியா வியாழக்கிழமை நடைபெறும் அதன் பணவியல் கொள்கைக் குழு கூட்டத்தில் ஓபிஆரை 2.75 சதவீதமாகப் பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த விகிதத்தை உயர்த்தக்கூடும்.

ஜுவாய் ஐகியூஐயின் இணை நிறுவனர்  மற்றும் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி காஷிப் அன்சாரி கூறினார்.

பேங்க் நெகாரா மார்ச் 2023 முதல் வட்டி விகிதங்களை உயர்த்தாததால், இந்த ஆண்டின் இறுதிக்குள் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை பணவியல் கொள்கைக் குழு பரிசீலிக்கத் தொடங்க வேண்டும்.

சவாலான உலகளாவிய சூழல் இருந்தபோதிலும், பொருளாதாரம் மீள்திறனுடன் இருப்பதை, முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.3 சதவீதம் என்ற ஆரம்பக் கணிப்பு காட்டுவதாக அவர் கூறினார்.

வளர்ச்சிக்கு ஏற்ப பணவீக்கமும் அதிகரித்துள்ளது. ஆனால் அது இன்னும் மிதமான அளவில் உள்ளது.

2026இல் பணவீக்கம் 2.5 சதவீதத்தை எட்டக்கூடும் என்று கூறி, பேங்க் நெகாரா தனது கணிப்பையும் திருத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset