செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் எதிர்க்கட்சியாக இருக்க அம்னோ ஒருபோதும் முடிவு செய்யவில்லை: ஜாஹித்
கோலாலம்பர்:
நெகிரி செம்பிலானில் எதிர்க்கட்சியாக இருக்க அம்னோ ஒருபோதும் முடிவு செய்யவில்லை.
மாறாக ஒற்றுமை அரசாங்கத்திலேயே தொடர்ந்து நீடிக்கப் போவதாகவும் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கத் தயாராக இருப்பதாக முன்பு தெரிவித்திருந்த பல அம்னோ மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் வெறும் ஒரு கூற்றாகவே கருதப்பட்டன.
எதிர்க்கட்சியாக இருக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அது வெறும் ஒரு கூற்று மட்டுமே.
ஆனால், நெகிரி செம்பிலானில் உள்ள மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே நீடிப்பார்கள் என்று மத்திய அளவில் அம்னோ முடிவு செய்துள்ளது.
இன்று இங்குள்ள கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தின் டேவான்ன் மெர்டேக்கா அரங்கில் நடைபெற்ற காமி ஜென் மாரா கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2026, 5:55 pm
வளர்ப்பு மகனைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டார்
May 5, 2026, 5:17 pm
மலாக்காவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவரால் நிகழ்ந்த விபத்தில் இளம் தாய் மரணம்
May 5, 2026, 5:13 pm
விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் 48 மில்லியனை அங்கீகரித்துள்ளது
May 5, 2026, 4:45 pm
விலைவாசி உயர்வைக் குறைக்க 30,000 ரஹ்மா திட்டங்கள்
May 5, 2026, 4:22 pm
