செய்திகள் மலேசியா
மே மாத இறுதிக்குள் கேஎல்ஐஏ ஏரோட்ரெயின் 24 மணி நேரமும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: அந்தோனி லோக்
சிப்பாங்:
கேஎல்ஐஏ ஏரோட்ரெயின் சேவை மே மாத இறுதிக்குள் முழுமையாக 24 மணி நேரமும் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தேவையான அனைத்து தொழில்நுட்ப சோதனைகளையும் முடித்த பின்னர், சேவையை மீட்டெடுக்கும் செயல்முறை தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
முழுமையான செயல்பாடுகள் தொடங்குவதற்கு முன்பு, பாதுகாப்பு மதிப்பீடு, சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, சோதனைகள் குறித்த முழுமையான அறிக்கை அபாட்டிடம் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.
அபாட்டிடன் சரிபார்ப்புக்குப் பிறகு, இந்த மாத இறுதிக்குள் ஏரோட்ரெயின் மீண்டும் 24 மணி நேரமும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைக்கு சேவை இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஆனால் பராமரிப்புப் பணிகள், தண்டவாள ஆய்வுகளுக்காக இரவில் சில மணிநேரம் செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருந்தது.
இந்த மாத இறுதிக்குள் முழு சேவையும் 24 மணி நேரமும் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2026, 5:55 pm
வளர்ப்பு மகனைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டார்
May 5, 2026, 5:17 pm
மலாக்காவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவரால் நிகழ்ந்த விபத்தில் இளம் தாய் மரணம்
May 5, 2026, 5:13 pm
விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் 48 மில்லியனை அங்கீகரித்துள்ளது
May 5, 2026, 4:45 pm
விலைவாசி உயர்வைக் குறைக்க 30,000 ரஹ்மா திட்டங்கள்
May 5, 2026, 4:22 pm
