நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விலைவாசி உயர்வைக் குறைக்க 30,000 ரஹ்மா திட்டங்கள்

புத்ராஜெயா: 

மக்கள் தங்கள் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் பெறுவதற்கு உதவும் வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் 30,000 ஜுவாலான் ரஹ்மா மடானி திட்டத்தை (பி.ஜே.ஆர்.எம்.) விரிவுபடுத்தி செயல்படுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவுத் துறையால் (கே.பி.டி.என்.) நிர்வகிக்கப்படும் இந்தத் திட்டம், சந்தை விலையுடன் ஒப்பிடும்போது, ஐந்து முதல் 30 சதவீதம் வரை விலைக் குறைப்புகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

"கடந்த ஆண்டு, நம் நாட்டில் உள்ள அனைத்து மாநில சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய 25,000 க்கும் மேற்பட்ட பி.ஜே.ஆர்.எம். நிகழ்வுகளை அரசாங்கம் செயல்படுத்தியது.

அனைத்து மாநில சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செயல்பாடு விரிவுபடுத்தப்படும் என்றும், வாரத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

"இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகவும், சிறு வணிகர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் செயல்படுத்த, நாங்கள் உறுதி செய்ய வேண்டும். ஆகையால் சிறு வணிகர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

"இது பெரிய நிறுவனங்களுக்கான ஒரு வளாகமாக மாற விரும்பவில்லை, மாறாக, ஜுவாலான் ரஹ்மா மடானியின் நன்மைகள், சிறு வணிகர்கள் தங்கள் பொருட்களை மலிவான விலையில் விற்கும் வாய்ப்பை வழங்குவதை உறுதி செய்வதாகும்" என்றார் அவர்.

அந்த நடவடிக்கை, வாழ்க்கைச் செலவு பிரச்சினையை முழுமையாகத் தீர்க்காவிட்டாலும், அது மக்கள் தற்போது எதிர்கொள்ளும் அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset