நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வளர்ப்பு மகனைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டார்

லாவாஸ்: 

லாவாஸின் துருசான் பகுதியில் தனது 13 வயது வளர்ப்பு மகனைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரைப்  போலிஸார் கைது செய்துள்ளனர்.

லாவாஸ் மாவட்ட போலிஸ் தலைவர் துணை சூப்பிரண்டெண்டன் லியோங் டிண்டன், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, மதியம் 1.16 மணிக்கு, 74 வயதுடைய முதியவர் ஒருவரிடமிருந்து புகார் பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.

தனது பேரனைப் பாதிக்கப்பட்டவரின் வளர்ப்புத் தந்தையும், தனது மகனுமானவர் அடித்ததாக புகார்தாரர் கூறியதாகவும், மேலதிக நடவடிக்கைக்காக அவர் லாவாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

"அந்தப் புகாரின் பேரில், விசாரணைக்கு உதவும் வகையில், கடந்த மே 3 ஆம் தேதி, அதிகாலை 1.15 மணிக்கு, லாவாஸில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில், சந்தேக நபர் பணிபுரியும் இடத்தில் போலிஸார் அவரைக் கைது செய்தனர்.

"சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளில் சந்தேக நபருக்கு ஆம்ப்ஃபெட்டமைன், மெதாம்பேட்டமைன் வகை போதைப்பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தின.

"முந்தைய பதிவுகளைச் சரிபார்த்ததில், அந்த ஆணுக்கு மூன்று முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது" என்றார் அவர்.

இந்த வழக்கு, 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a), 1952 ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 15(1)(a) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஒரு தனி வழக்கில், நேற்று அதிகாலையில், லாவாஸ் நகரில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 36, 24 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர்களாகப் பணிபுரியும் இரண்டு சந்தேக நபர்களும், மேலதிகப் பரிசோதனைக்காக அதிகாலை 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும், சிறுநீர் பரிசோதனையின் முடிவுகள், இரண்டு சந்தேக நபர்களுக்கும் ஆம்ப்ஃபெட்டமைன், மெதாம்பேட்டமைன் வகை போதைப்பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தின.

முந்தைய பதிவுகளைச் சரிபார்த்ததில், சந்தேக நபர்களில் ஒருவருக்கு ஒரு முந்தைய குற்றப் பதிவு இருந்ததாகவும் அதே சமயம் மற்றவருக்கு குற்றப் பதிவு இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.

இந்த வழக்கு, 1952 ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 15(1)(a) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset