செய்திகள் மலேசியா
விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் 48 மில்லியனை அங்கீகரித்துள்ளது
புத்ராஜெயா:
வடக்கு மாநிலங்களில், குறிப்பாகக் கெடாவில், அதிகரித்து வரும் செலவுகள், நீடித்த வறட்சிக் காலத்தால் பாதிக்கப்பட்ட, சுமார் 240,000 பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில், 48 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
வழக்கத்தை விட நீண்ட வறண்ட காலநிலை காரணமாக, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தற்போது சிரமங்களை எதிர்கொள்வதை அரசாங்கம் உணர்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.
எனவே, அரச மலேசிய அரச விமானப்படையின் (தி.யூ.டி.எம்.) ஈடுபாட்டுடனும், மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் (ஜே.பி.பி.எம்.) உதவியுடனும், மேக விதைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
"வடக்கு கெடாவில், வழக்கத்தை விட நீண்ட வறட்சிக் காலத்தை எதிர்கொள்வதை நாங்கள் அறிவோம். இது விவசாயத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் சிரமங்களை ஏற்படுத்துகிறது.
"தி.யூ.டி.எம்.-ஆல் மேக விதைப்பை அதிகரிக்குமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். மேலும், ஒப்பீட்டளவில் சிறிய திறனைக் கொண்டிருந்தாலும், அடுத்த சில நாட்களில் இந்த நடவடிக்கைகளைத் தொடருமாறு தீயணைப்புத் துறையையும் கேட்டுக்கொண்டுள்ளேன்" என்றார் அவர்.
அதே நேரத்தில், வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் சாபு முன்னர் அறிவித்தது போல, உழவு ஊக்கத்தொகைக்கான சிறப்பு உதவியின் விகிதத்தை, ஒரு ஹெக்டேருக்கு 160 ரிங்கிட்டிலிருந்து 300 ரிங்கிட்டாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
தேசிய பொருளாதார நடவடிக்கை சபையின் (எம்டென்) கூட்டம், விவசாயிகளுக்கு 200 ரிங்கிட் முன்பணத்தை வழங்கவும் ஒப்புக்கொண்டதாக பிரதமர் கூறினார்.
விவசாயிகள் உழவு இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க வேண்டியிருப்பதாலும், நடவு நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு முன்பணம் தேவைப்படுவதாலும், இந்த நடவடிக்கை முக்கியமானதாகக் கருதப்படுவதாக அவர் விளக்கினார்.
இந்த உதவி, நாட்டின் நெல் உற்பத்தியின் தொடர்ச்சியை உறுதி செய்வதில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்ப்பப்படுவதாக அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 5, 2026, 5:55 pm
வளர்ப்பு மகனைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டார்
May 5, 2026, 5:17 pm
மலாக்காவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவரால் நிகழ்ந்த விபத்தில் இளம் தாய் மரணம்
May 5, 2026, 4:45 pm
விலைவாசி உயர்வைக் குறைக்க 30,000 ரஹ்மா திட்டங்கள்
May 5, 2026, 4:22 pm
