நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெல் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 200 ரிங்கிட் வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது: பிரதமர்

புத்ராஜெயா:

சிறப்பு உழவு ஊக்கத்தொகை உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 240,000 பதிவு செய்யப்பட்ட நெல் விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் வகையில், ஒரு ஹெக்டேருக்கு 200 ரிங்கிட் உதவித் தொகை வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இன்று தாம் தலைமை தாங்கிய தேசியப் பொருளாதார நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்திற்கு 48 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்குக் காரணம், அவர்கள் உழவு இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க வேண்டியுள்ளது. எனவே, உழவுத் திட்டம் தொடர வேண்டும். ஆனால் அவர்களுக்கு மூலதனம் தேவைப்படுகிறது.

ஆகையால், அவர்கள் நெல் நடவுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக,200 ரிங்கிட் உதவித் தொலகை வழங்குவது சிறந்தது என்று நாங்கள் கருதுகிறோம்.

இன்று புத்ராஜயாவில் நடைபெற்ற உலகளாவிய விநியோக நெருக்கடி குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் விவசாய உள்ளீடுகளின் விலை உயர்வால், நெல் விவசாயிகள் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளது என்றும் நிதி அமைச்சராகவும் இருக்கும் டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset