செய்திகள் மலேசியா
சிறு வணிகர்களுக்கு நற்செய்தி: கடை வாடகையைக் குறைக்க உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பிரதமர் உத்தரவு
புத்ராஜெயா:
அதிகரித்து வரும் செலவுகளால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில், அனைத்து உள்ளூர் அதிகாரிகளும் தொடர்புடைய நிறுவனங்களும், தங்கள் வணிக வளாக வாடகை விகிதங்களைக் குறைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, இந்த மாதம் உடனடியாக, மஜ்லிஸ் அமனா ராக்யாட் (மாரா), ஊடா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (ஊடா) போன்ற அனைத்து தொடர்புடைய நிறுவனங்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
கோலாலம்பூர் மாநகராட்சியின் (டி.பி.கே.எல்) முந்தைய வாடகைக் குறைப்பு நடவடிக்கையை இந்த முன்முயற்சி பின்பற்றுவதாக அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் நேர்மறையான பதிலை வழங்கியுள்ளதாகவும், எதிர்வரும் காலத்தில் வாடகைக் குறைப்பை அறிவிக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
"இந்த முன்முயற்சி டி.பி.கே.எல்-இன் வாடகை விகிதங்களைக் குறைக்கும் நடவடிக்கையைப் பின்பற்றுவதாகும். இந்த மாதம் முதல் வாடகை விகிதங்களைக் குறைக்க, அனைத்து உள்ளூர் அதிகாரிகள், மாநிலங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
"நிச்சயமாக, இது மற்ற அனைத்து உள்ளூர் அதிகாரிகள், மாநில அரசுகளின் அதிகார வரம்பாகும். வணிகர்களும், வியாபாரிகளும் எதிர்கொள்ளும் அழுத்தத்தையும், சுமையையும் குறைப்பதற்காக, இந்த மாதமே நடைமுறைக்கு வரும் வகையில், விகிதங்களை உடனடியாகக் குறைக்குமாறு நான் அவர்களை வலியுறுத்துகிறேன்" என்று இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
இன்று நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கை சபையின் (எம்டென்) கூட்டத்தில் இந்த நடவடிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 5, 2026, 5:55 pm
வளர்ப்பு மகனைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டார்
May 5, 2026, 5:17 pm
மலாக்காவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவரால் நிகழ்ந்த விபத்தில் இளம் தாய் மரணம்
May 5, 2026, 5:13 pm
விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் 48 மில்லியனை அங்கீகரித்துள்ளது
May 5, 2026, 4:45 pm
விலைவாசி உயர்வைக் குறைக்க 30,000 ரஹ்மா திட்டங்கள்
May 5, 2026, 4:22 pm
