நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாக்குதலில் கலைந்த கரு; மயானத்தில் இரகசியப் புதைப்பு

கோலாலம்பூர்: 

மனித உறவு வன்முறையின் இருண்ட நிழலில் சிதறும்போது, அதன் விளைவுகள் மனதை உலுக்கும்விதமாக வெளிப்படுத்துகிறது. கடந்த மாதம் சுங்கை பட்டானியில் தனது மனைவியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர், ஏப்ரல் 2 அன்று, கெடாவில் உள்ள ஒரு முஸ்லிம் கல்லறையில் கரு ஒன்றைப் புதைத்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

43 வயதுடைய சந்தேக நபர், கடந்த வியாழக்கிழமை, புதைத்த இடத்துக்கு போலிஸை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், வளர்ச்சியடையாத கருத் திசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வக பரிசோதனைகள் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நிலையில், பிறப்பை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது என்று கெடா போலிஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 2 ஆம் தேதி, அம்பாங் ஹைட்ஸ், சுங்கை பட்டானியில் நடந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கருச்சிதைவு ஏற்பட்டதாக நம்பப்படும், தனது மனைவியின் 12 வார கர்ப்பத்தில் இருந்ததே அந்தக் கரு என்றார் அவர்.

 தனது கணவரின் தாக்குதலால் கருச்சிதைவுக்குள்ளான அந்த 39 வயது அரசு ஊழியர், உடலில் பலத்த காயங்களுடன் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏப்ரல் 28 அன்று கெடாவில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலும் விசாரணைக்கு உதவும் வகையில் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset