செய்திகள் மலேசியா
சுற்றுலா வேன் விபத்து: போதைப்பொருள் பயன்படுத்திய ஓட்டுநருக்கு 7 நாள் போலிஸ் காவல்
அலோர் காஜா:
சாலைகள் பாதுகாப்பின் பாதையாக இல்லாமல், உயிர்களை விழுங்கும் பேராபத்து மேடையாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், போதைப்பொருள் செல்வாக்கில் வாகனம் ஓட்டும் செயல்கள் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமாக வெளிப்பட்டுள்ளது.
எட்டு இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்தில் சிக்கிய நிலையில், 55 வயதுடைய ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை ஏழு நாட்கள், மே 11 வரை தடுப்பு காவலில் வைக்க நீதிபதி கமருல் அரிஸ் கமாலுதீன் உத்தரவிட்டுள்ளார்.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1A)(a) கீழ் விசாரணை நடைபெற்று வரும் இவ்வழக்கில், ஓட்டுநரின் கவனக்குறைவும், போதைப்பொருள் தாக்கமும், பயணிகளின் உயிர்களை ஆபத்துக்கு உள்ளாக்கியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கோலாலம்பூரில் இருந்து மலாக்காவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன், PLUS நெடுஞ்சாலையின் 212வது கிலோமீட்டரில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் போதைப்பொருள் செல்வாக்கில் வாகனம் ஓட்டும் வழக்குகள் அதிகரித்து வருவது ஒரு பயங்கரமான சமூகச் சிதைவின் அறிகுறியாகும். பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்களே இவ்வாறு சட்டத்தை மீறினால், பொதுமக்களின் உயிர் யாரிடம் பாதுகாப்பாக இருக்கும்?
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 5, 2026, 5:55 pm
வளர்ப்பு மகனைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டார்
May 5, 2026, 5:17 pm
மலாக்காவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவரால் நிகழ்ந்த விபத்தில் இளம் தாய் மரணம்
May 5, 2026, 5:13 pm
விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் 48 மில்லியனை அங்கீகரித்துள்ளது
May 5, 2026, 4:45 pm
விலைவாசி உயர்வைக் குறைக்க 30,000 ரஹ்மா திட்டங்கள்
May 5, 2026, 4:22 pm
