செய்திகள் உலகம்
மயோன் எரிமலை செயல்பாடு: பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ விரிவான பதில் நடவடிக்கையை மார்கோஸ் உத்தரவிடுகிறார்
மணிலா:
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் ஆர் மார்கோஸ் ஜூனியர், அல்பே மாகாணத்தில் மயோன் எரிமலையின் தொடர் செயல்பாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட சாம்பல் மழையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ, ஒரு விரிவான அரசாங்க பதில் நடவடிக்கைக்கு உத்தரவிட்டதாக பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் துறை, குடியிருப்பாளர்களுக்கும், மீட்புக் குழுக்களுக்கும் பாதுகாப்பான பாதையை உறுதி செய்வதற்காக, முதன்மைச் சாலைகளில் இருந்து எரிமலை சாம்பலை அகற்றும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியது.
சுகாதாரத் துறை, N95 முகக்கவசங்களை விநியோகிக்கத் தொடங்கியதுடன், சாம்பல் மழையால் ஏற்படும் இருமல், சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சல் உள்ளிட்ட சுவாச நோய்களைச் சமாளிக்க, நகரும் கிளினிக்குகள், நீர் நிலையங்களையும் பயன்படுத்தியது.
உள்துறை, உள்ளூர் அரசாங்கத் துறை மூலம், தீயணைப்புப் பாதுகாப்புப் பணியக உறுப்பினர்கள், நீர் தெளிப்பு, சாம்பலை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டனர்.
குடிமைப் பாதுகாப்பு அலுவலகம், தேசிய பேரிடர் இடர் குறைப்பு, மேலாண்மை கவுன்சிலின் கீழ் வெளியேற்றும் முயற்சிகள் செயல்படுத்தப்பட்டன. எரிமலையைச் சுற்றியுள்ள அதிக ஆபத்துள்ள மண்டலங்களை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
சமூக நலன், மேம்பாட்டுத் துறை, பைகோல் பிராந்தியம் முழுவதும் உள்ள வெளியேற்ற மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்காக, உணவுப் பொதிகள், தயாராக உண்ணக்கூடிய உணவுகள், பிற உதவிப் பொருட்கள் ஆயிரக்கணக்கில் முன்கூட்டியே சேமித்து வைத்துள்ளது.
குறிப்பாக கனமழை பெய்தால், எரிமலைக் குழம்பு ஓடுவதற்கான சாத்தியக்கூறுகளுக்காக, ஆறுகள், நீர்ப் பாதைகளையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை, 32 எரிமலை நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டதில், அந்த எரிமலை, அதிகரித்து வரும் மாக்மாடிக் செயல்பாட்டின் அறிகுறிகளைத் தொடர்ந்து காட்டியது. இதில், இரண்டு முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்த 25 எரிமலை அதிர்வுகள் அடங்கும். இது, அல்பேயில் உள்ள பல்வேறு நகரங்களைச் சேர்ந்த குறைந்தது 50 கிராமங்களைப் பாதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள், வீட்டுக்குள் இருக்குமாறும், முகக்கவசங்களை அணியுமாறும், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் போது, உள்ளூர் அதிகாரிகள் விடுக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 4, 2026, 5:48 pm
அரபு எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் இருந்து யூஏஈ விலகுகிறது
May 4, 2026, 1:01 pm
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிய கப்பல்களை மீட்க ட்ரம்ப்பின் புதிய திட்டம்
May 3, 2026, 2:12 pm
தாய்லாந்தை அச்சுறுத்தும் இரட்டை வானிலை ஆபத்து: ஒரே நேரத்தில் வெயிலும் புயலும்
May 3, 2026, 10:13 am
சர்வதேச கடற்பகுதியில் அத்துமீறல்: ஆர்வலர்கள் கைதுக்கு ஸ்பெயின் கடும் கண்டனம்
May 2, 2026, 6:04 pm
காசா உதவிக்கப்பல் இஸ்ரேலால் தடுப்பு: கிரீட் தீவில் 175 ஆர்வலர்கள் தரை இறக்கம்
May 2, 2026, 1:52 pm
