செய்திகள் மலேசியா
சிலாங்கூர் சுல்தானை அவமதித்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர் புக்கிட் மெர்தாஜாமில் கைது
கோலாலம்பூர்:
சமூக ஊடகங்களில் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் சராஃபுதீன் இட்ரிஸ் ஷாவை அவமானப்படுத்தும் வகையில் படங்களைப் பதிவேற்றியதாக சந்தேகிக்கப்படும் ஒரு உள்ளூர் ஆடவரை, நேற்று மாலை பினாங்கின் புக்கிட் மெர்தாஜாமில் போலிஸார் கைது செய்தனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு, பினாங்கு கான்டிஞ்சென் போலிஸ் தலைமையகம், மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் ஒத்துழைப்புடன் கூடிய ஒரு போலிஸ் குழுவினரால், 30 வயதுக் கடந்த சந்தேக நபர், நேற்று இரவு 7.10 மணிக்குக் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பதிவேற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும், சிம் கார்டுகளுடன் கூடிய இரண்டு சாம்சங் பிராண்ட் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
"கடந்த மே 2 ஆம் தேதி, 'லூக்காஸ் லியாம்' என்ற பேஸ்புக் அகப்பக்கத்தில், அவமரியாதை உள்ளடக்கத்தைப் பதிவேற்றியதாக நம்பப்படும் நிலையில், அதைப் பற்றிய விசாரணையைத் தொடர்ந்து, இந்தக் கைது செய்யப்பட்டது" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு, புக்கிட் அமானின் வழக்குத் தொடர்பு/சட்டப் பிரிவின் (D5) சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவால் (USJT), 1948 ஆம் ஆண்டின் தூண்டுதல் சட்டத்தின் (Akta Hasutan) பிரிவு 4(1), தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504, 1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
"இதுவரை, இதே பிரச்சினை தொடர்பாக நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 12 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன. சந்தேக நபருக்கான தடுப்பு காவல் விண்ணப்பம் நாளை செய்யப்படும்" என்றார் அவர்.
சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதில் இருந்து பொதுமக்களை குமார் எச்சரித்தார், குறிப்பாக மதம், அரசர்கள், இனம் (3R) போன்ற உணர்திறன் பிரச்சினைகளை உள்ளடக்கியவை, அவை சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கலாம்.
"தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்காக, சமரசமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 3, 2026, 9:24 pm
கடும் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு 56 பேர் பாதிப்பு; இருவர் மரணம்: சுகாதார அமைச்சு
May 3, 2026, 9:23 pm
குடிபோதையில் வாகனம் ஓட்டியவரால் ஏற்பட்ட விபத்தில் கணவன், மனைவி மரணம்
May 3, 2026, 5:16 pm
நள்ளிரவில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் 76 வயது மூதாட்டி உயிரிழப்பு
May 3, 2026, 2:13 pm
