நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிலில் 'அல்லாஹ்' என்ற சொல் விவகாரம்: வன்பொருள் கடை உரிமையாளரை போலிஸார் தடுத்து வைத்தனர்

கங்கார்: 

செரியாப் பகுதியில் தனது வளாகத்தில் உள்ள ஒரு சிறிய கோவிலில் 'அல்லாஹ்' என்ற சொல் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக, ஒரு வன்பொருள் வணிக வளாகத்தின் உரிமையாளரை போலிஸார் தடுத்து வைத்தனர். இந்தச் சம்பவம்  சமூக ஊடகங்களில் வைரலானது.

பெர்லிஸ் போலிஸ் தலைவர் டத்தோ முஹம்மத் அப்துல் ஹலிம், 61 வயதான அந்த முதியவர், இன்று மதியம் 3 மணியளவில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

"தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298, 1955 ஆம் ஆண்டின் சிறிய குற்றங்கள் சட்டத்தின் (AKK 1955) பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும்.

"எந்தவொரு அனுமானங்கள் அல்லது தூண்டுதல்களையும் நிறுத்துமாறு அனைத்து தரப்பினரையும் போலிஸார் கேட்டுக்கொள்கிறார்கள். மேலும், இந்த வழக்கைச் சமாளிப்பதற்கான மேலதிக நடவடிக்கைக்கு இடமளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறார்கள்" என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், சமூக ஊடகங்களில் வைரலானது போல, சம்பந்தப்பட்ட வன்பொருள் கடையில் உள்ள சிறிய கோவிலில் 'அல்லாஹ்' என்ற சொல் இருப்பது குறித்த புகாரைப் போலிஸார் பெற்றதாக முஹம்மத் உறுதிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட வீடியோவைப் பதிவு செய்த நபரை அடையாளம் காண்பதோடு, சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தின் உரிமையாளரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறுவதற்கும், போலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துவார்கள் என்றார் அவர்.

இதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட கோவிலில் புனிதமான வார்த்தை கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ பரவியதில், என்ஜிஓ, ஒரு நபரும் இணைந்து, போலிஸ் புகாரைப் பதிவு செய்தனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset