செய்திகள் மலேசியா
நள்ளிரவில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் 76 வயது மூதாட்டி உயிரிழப்பு
பெசுட்:
கோத்தா பாரு-கோலா திரெங்கானு சாலையில், அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் சிற்றுந்து (van) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில், 76 வயது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அந்த வாகனத்தில் பயணித்த சில பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.50 மணியளவில் கம்போங் அனாக் இக்கான் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்தச் சிற்றுந்தினை உள்ளூர் நபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார் என்றும், அவருடன் 9 பயணிகள் பயணித்துள்ளனர் என்றும் பெசுட் மாவட்டப் போலிஸ் கண்காணிப்பாளர் முஹம்மத் ரோசைம் அப்துர் ரஹிம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் பேராக் மாநிலத்தில் இருந்து, கம்போங் அலோர் செர்டாங் நோக்கிப் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகப் பெசுட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முனா அவாங் என்ற 76 வயது மூதாட்டி, சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து போலிசார் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வாகன ஓட்டிகள் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் போது, குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் கூடுதல் கவனத்துடனும், வாகனத்தைச் சரிபார்த்துப் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்றும் போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 3, 2026, 2:13 pm
புக்கிட் பிந்தாங் ‘ரெயின் ரேவ்’ விழாவில் பரபரப்பு: கத்தியுடன் வந்த பெண் கைது
May 3, 2026, 1:47 pm
கல்வி அனைத்து மாணவர்களுக்கான உரிமை; பாகுபாடு பார்க்கப்படாது: ஃபட்லினா சிடேக்
May 3, 2026, 10:25 am
